பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகள்..!
பூண்டு பற்களை இடித்து 15நிமிடங்கள் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, அதனுடன் தேன், இஞ்சி சாறு கலந்து ஆறியவுடன் சுவைத்தால் சுவையான பூண்டு டீ தயார்.
பூண்டு டீ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கவும் உதவும்.
பூண்டில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கலவைகள் உள்ளன. பூண்டு டீ அருந்துவது, இதய நோய் அபாயத்தைக்குறைக்கிறது .
கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளை சுத்தப்படுத்தும் ஆற்றலை பூண்டுடீ கொண்டுள்ளது. இது நச்சுகளை நீக்கி ஆரோக்கியமான செயல்பாட்டை மேம்படுத்தஉதவுகிறது.
பூண்டு டீயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சளி, இருமல் மற்றும் காய்ச்சல்போன்ற சுவாச தொற்று பாதிப்புக்களின் அறிகுறிகளைத் தடுக்கவும் குறைக்கவும்உதவும்.
பூண்டு டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கீல்வாதம், ஆஸ்துமா அல்லது செரிமான கோளாறுகள் போன்ற அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது பயனளிக்கும்.
பூண்டு டீ அருந்துவது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும் குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும்.
பூண்டு டீ உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
பூண்டு டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஆரோக்கியமான மற்றும் இளமையான தோற்றத்தை அளிக்கவும், முகப்பரு மற்றும் தோலில் ஏற்படும் அரிப்புகளை குறைக்க உதவுகிறது.