ஆப்ரிக்க கண்டத்தின் அடையாளம் கென்யா.. அமைதி விரும்பிகளுக்கான ஸ்பாட்...!

ஆப்ரிக்க நாடான கென்யா, பிஸியான நகரங்கள், ஷாப்பிங் மால், கிளப்கள் அற்ற அமைதியான இயற்கை வளம் சூழ்ந்த பட்ஜெட் சுற்றுலாத் தலம். குறிப்பாக மன அமைதி தேடுபவர்களுக்கு ஏற்ற இடம்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இங்கு பட்ஜெட் சுற்றுலா செல்லலாம். கென்யாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் குறித்துப் பார்ப்போம்.

வ.நைரோபியில் 90 ஆயிரம் ஏக்கரில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயம் ஓல் பெஜேட்டா. இங்கு அரிய வகை வெள்ளை ரெய்னோ, சிறுத்தை, புலிகள் பாதுகாப்பான இனப்பெருக்கத்தில் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன.


கிரேட் ரீஃப் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் கென்யா யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட பகுதி.

வெண்நிற மணல், கோரல் பாறைகள் கொண்ட அழகான கடற்கரை மலிண்டி. இங்கு ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் குளிர்காலத்தில் வருகை தந்து கடற்கரையில் சூரிய குளியல் எடுத்துச் செல்வர்.

டேவிட் ஷெல்ட்ரிக் யானைகள் சரணாலயம்... ஆதரவற்ற, காடுகளில் வழிதவறிய யானைக் குட்டிகளை மீட்டு வளர்க்கும் யானைகளின் நர்சரி இது.

நைரோபி தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், யானைகள், காட்டெருமைகள், சிறுத்தைகள், வரிக் குதிரைகள், ஒட்டகச்சிவிங்கிகள், புலிகள், சிங்கங்கள் சுதந்திரமாக உலா வருகின்றன.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்