பலே பாலி : ஒரு அழகிய ஹிந்து தீவு!
பாலி (Bali) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஹிந்து தீவாகும்.

ஊர் முழுக்க கோயில்கள், அழகிய சிற்பங்கள் என நவீன வசதிகளுடன் கூடிய பழங்கால இந்திய கிராமங்கள்போல், அதன் பல பகுதிகள் தோன்றுகின்றன.


பாலியில் ராமாயண தெருக் கூத்து பல இடங்களில் நடைபெறுகிறது. அங்கு உள்ள அனைத்து கோயில்களிலும், ராமாயண தெருக் கூத்தை நீங்கள் காணலாம்.

இங்கு தேயிலை போல மலையிலேயே நெல் சாகுபடி செய்வது ஆச்சரியப்படுத்தும், பார்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கும்.


இது ஒரு தீவு என்பதால் இங்கு டைவிங் மற்றும் ஸ்நோர்கெலிங், பாரா கிளைடிங், போன்ற கடல் சார்ந்த சாகச ரைடுகள் ஏராளமாக உள்ளன.

பாலி இயற்கை வளம் நிறைந்த பகுதி. அதனால் அதை அழகிய வண்ண ஓவியமாக வரைந்து பிரேம் செய்து விற்கப்படுகிறது.


பாலிக்கு 30 நாட்களுக்கும் குறைவான நாட்கள் பயண செய்யும் இந்தியப் பயணிகளுக்கு விசா தேவையில்லை.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்