இந்தியாவின் டாப் டிரெக்கிங் இடங்கள் இது... எப்போ பிளான் பண்ணப் போறீங்க?

கம்பீரமான இமயமலை சாகசப் பிரியர்களுக்கு பிடித்தமான சுற்றுலாத் தளமாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சாகசப் பிரியர்கள் உற்சாகமாக இங்கு குவிகின்றனர்.

உத்தரகாண்டின் கர்வால் இமயமலையைப் பின்தொடர்கிறது கங்கோத்ரி கோமுக் டிரெக்கிங். பல்வேறு தாவரங்கள், விலங்கினங்களை ரசித்தவாறு, நீல மலைத் தொடரின் வழியாக செல்லலாம்.

லடாக்கின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தளமான உறைந்த ஜான்ஸ்கர் நதியில் டிரெக்கிங் செல்லும் போது மிதமான மற்றும் கடினமான அனுபவத்தை இது வழங்குகிறது.

கர்நாடகாவில் உள்ள நரசிம்ம பர்வதா டிரெக்கிங் மிகவும் கடினமான ஒன்றாகும். டிரெக்கிங் செய்பவர்களுக்கு இது மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை அளிக்கிறது.

மூச்சடைக்கக்கூடிய அழகிய இயற்கைக்காட்சிகளை ஏராளமாக வைத்துள்ளது கேரளாவில் உள்ள செம்ப்ரா சிகரம்; இது இந்தியாவின் தெற்குப்பகுதியில் உள்ள மற்றொரு டிரெக்கிங் பகுதி ஆகும்.

மே.வங்காளத்தில் உள்ள சந்தக்பு, ஃபலூட் டிரெக்கிங், எவரெஸ்ட் சிகரம், லோட்சே, மகலு மலை மற்றும் கஞ்சன்ஜங்கா மலையை கடக்கும் கடினமான ஒன்றாகும்; சிகரங்களின் கம்பீரமான அழகை ஆசைதீர ரசிக்கலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...