தண்ணீர் தண்ணீர்...!

தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. தினமும் குறைந்தபட்சமாக எட்டு கிளாஸ் தண்ணீராவது குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது உடலின் உள்ளுறுப்புகள் முறையாக செயல்பட உதவுகிறது. எனவே தண்ணீரை சரிவர குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம்.


காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீரைக் குடிப்பது, உடலில் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவும்.

உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவும்.

குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்