ஸ்லிம் பியூட்டியா தெரியணுமா? புடவையை பார்த்து வாங்குங்க போதும்.

'ஸ்லிம்மா சிம்ரன் மாதிரி இருந்தாதான் புடவை கட்டினால் அழகாக இருக்கும். நமக்கு எல்லாம் செட் ஆகாது' என்பது உடல் பருமனாக உள்ள பலரின் தவறான நினைப்பு.

ஒவ்வொருவரின் நிறம், உயரம், உடல் அமைப்புக்கு தகுந்தாற்போல் புடவையை தேர்வு செய்தாலே அத்தனை பேரும் அழகாய் தெரியலாம் புடவையில்.

புடவையை தேர்வு செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தால் போதும் நீங்கள் தேவதையே...

உங்களின் உடல் வகை, அமைப்பு, நிறம் மற்றும் உயரத்துக்கு ஏற்ப புடவைகளை தேர்வு செய்யுங்கள். அப்போது தான் உடலோடு பொருந்தி அழகிய, ரிச் லுக் கிடைக்கும்.

ஜார்ஜெட், ஷிபான், சாடின் அல்லது கிரேப் போன்ற இலகுரக புடவைகளுக்கு முக்கியத்துவம் தரவும். இது உங்களின் உடலை அழகாக தழுவி, திருத்தமான தோற்றத்தை தரும்.

புடவையில் மெல்லிய பார்டர் இருந்தால் தூக்கலாக இருக்கும். பிரிண்டட் புடவைகளை பொருத்தவரை சிறிய, பரவலான பிரிண்ட்களை தேர்வு செய்யுங்கள்.

புடவையை தேர்வு செய்யும் போது, அதன் நிறத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

புடவையை மடிப்பு எடுத்து கட்டுவதில் கூடுதல் கவனம் தேவை. மிகவும் நீளமான புடவையை தவிர்க்க வேண்டும்.

புடவைக்கு பொருத்தமான பிளவுஸ், அணிகலன்களும், உங்களின் தோற்றத்தை மெருகேற்றிக் காட்டும்.

கனமான மேக்கப்பைத் தவிர்த்து லேசான மேக்கப் மட்டுமே இருக்க வேண்டும்.

எப்போதும் உங்களின் குறைகளையே நினைக்காமல், மனதிலிருந்து அதை தூக்கியெறிந்து விட்டு, கம்பீர நடை போடுங்கள். இது உங்களின் தோற்றத்தையும் மிகைப்படுத்தி அழகை மெருகேற்றிக் காட்டும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...

கிளிக் செய்யவும்