எலிஃபேன்ட் ராக்: இயற்கையாக உருவான யானை!

ஐஸ்லாந்தின் தென் கடற்கரையிலிருந்து சுமார் 7.4 கிலோமீட்டர் தொலைவில் யானை வடிவத்தில் ஒரு பாறை அமைந்துள்ளது. மேலும் இது யானையின் தோல் போன்ற நிறத்துடன் இருப்பதால், நாம் நம்பக்கூடிய விதத்தில் உள்ளது.

இது தொடர்ந்து ஏற்பட்ட எரிமலையின் பல வெடிப்புகளால் தோன்றியதாக நம்பப்படுகிறது. 1973 ல் நடந்த எல்ட்ஃபெல்லின் எரிமலை வெடிப்பின் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இங்கிருந்த மக்கள் தீவை விட்டு வெளியேறியுள்ளனர்.

அந்நேரத்தில் நடந்த மிக பெரிய பேரழிவு யானை பாறை போன்ற பல வித்தியாசமான பாறைகளை உருவாக்கியுள்ளது.

மேலும் இங்கு பிரபலமான எல்ட்ஃபெல் பள்ளம் உள்ளது மற்றும் புகழ்பெற்ற எல்ட்ஹைமர் அருங்காட்சியகமும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வெஸ்ட்மேன் தீவுகளைப் பார்வையிட செல்பவர்கள் பறவைகள், ஃபின் திமிங்கலங்கள், ஓர்காஸ் போன்ற வித்தியாசமான உயிரினங்களையும் இங்கு பார்க்கலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...