நீல நிற புடவையில் ஜொலிக்கும் த்ரிஷா
தமிழ் சினிமா உலகில் தேவதையாக உலா வருகிறார் த்ரிஷா. 20 ஆண்டுகளை கடந்தும் முன்னணி நடிகைகளில் ஒருவராக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
'பொன்னியில் செல்வன்' படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. புத்திசாலித்தனமும், சமயோஜித அறிவுடனும் கூடிய பேரழகி கதாபாத்திரம் இது.
இதன் முதல் பாகம் கடந்தாண்டில் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றது. இதனால், செல்லும் இடமெங்கும் குந்தவை என்றே த்ரிஷாவை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.
பொன்னியின் செல்வன் - 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் குந்தவையான த்ரிஷா பளபளக்கும் நீல நிற புடவையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
வெள்ளி நிற சரிகையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய புடவையில் தேவதையாக ஜொலித்தார் அவர். ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ், நெக்லஸ் என பாரம்பரியம் மற்றும் ஸ்டைலிஷ் லுக்கில் அசர வைத்தார்.
முதல் பாக புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் த்ரிஷாவின் உடைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.