சம்மரில் கூலாக உலா வர ஸ்டைலிஷான உடைகள் சில...!
கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான காட்டன் போன்ற உடைகளை பார்த்துப் பார்த்து அணிய வேண்டியுள்ளது.
தேடித்தேடி அணிந்தாலும் டிரெண்டியாக.. ஸ்டைலிஷாக... இருக்க வேண்டும் என்பது இளசுகளின் எதிர்ப்பார்ப்பாகும்.
கஃப்தான் உடைகள் பொதுவாக காட்டன் போன்ற எளிமையான துணிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
உங்களின் வசதிக்கேற்ப நீளமாகவோ அல்லது குட்டையாகவோ அணியலாம்.
பிரிண்டட் பூக்கள் அடங்கிய டிசைனில் அவரவர் விருப்பத்துக்கேற்ப உடைகளை தேர்வு செய்யலாம்.
கொளுத்தும் வெயிலில் ஸ்டைலிஷாகவும், உடலில் எரிச்சலும் இருக்கக்கூடாது என்றால் இந்த கிராஃபிக் சட்டைகளை தேர்வு செய்யலாம்.
கலர்புல்லான பலாஸ்ஸோ பேன்ட்கள், ஷார்ட் ஸ்கர்ட்கள், டிஸ்டிரஸ்டு, டிசாஸ்டர் மற்றும் டோர்ன் ஜீன்ஸ் போன்ற ஆடைகளுடன் மேட்ச் செய்யலாம்.
மாடர்ன் தோற்றத்தை அளிக்கும் இந்த டேங்க் டாப்ஸ்களை செல்லும் இடங்களுக்கேற்ப விதவிதமாக அணியலாம்.
பிளேஸர், மிடி, மேக்ஸி ஸ்கர்ட், காட்டன் ஜீன்ஸ் போன்றவற்றுடன் அணியும் போது மேட்சிங் ஆக இருக்கும்.
பல்வேறு சூழல்களுக்கும், எப்போது வேண்டுமானாலும் இந்த டூனிக்ஸ் டாப்ஸ்களை அணியலாம்.
மேட்சிங்காக லெக்கின்ஸ் அல்லது காட்டன் பேன்ட்களை அணிந்தால் டிரெண்டியாக இருக்கக்கூடும்.