அழகிய ஆர்கன்சா புடவையில் புதுப்பொலிவுடன் சமந்தா
மயோசிட்டிஸ் பிரச்னையில் இருந்து மெதுமெதுவாக மீண்டு வரும் சமந்தா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
அதேவேளையில், சாகுந்தலம் பட பிரமோஷனிலும் பிஸியாக உள்ள இவர், அழகிய உடைகளில் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
சமீபத்தில் 'ஐகேயா' பிராண்டின் அழகிய எம்ப்ராய்டரி ஆர்கன்சா புடவையில் சமந்தா அழகு தேவதையாக உலா வந்தார். இதில் சிக்கலான எம்பிராய்டரி பூ வேலைப்பாடுகள் அழகாக காணப்பட்டன.
மேட்சிங்காக கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்திருந்தார் சமந்தா. காதணிகள் மட்டுமே அலங்கரித்த நிலையில், இளஞ்சிவப்பு நிற லிப்ஸ்டிக்கில் அசத்தலாக இருந்தார்.
இந்த வெள்ளை நிற ஆர்கன்சா புடவையில் முற்றிலும் மகிழ்ச்சியுடன் நளினமாக உள்ளார் சமந்தா.
பீச் நிற பிளேசர் மற்றும் பழுப்பு நிற பலாஸோவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் சமந்தா.