டிராகன் சிக்கன் செய்யலாம் வாங்க...!

ஒரு பவுலில் 300 கிராம் சிக்கன், 1/4 டீஸ்பூன் குருமிளகு, 2 டீஸ்பூன் சோயா சாஸ், 3 டீஸ்பூன் சோளமாவு, ஒரு முட்டை, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், சிக்கனை நன்றாகப் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உடைத்த 1/4 கப் முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். தொடர்ந்து, பொடிப்பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு தலா ஒரு ஸ்பூன், ரெட் சில்லி பிளேக்ஸ் 2 ஸ்பூன் சேர்க்கவும்.

சிறிதளவு வெங்காயத்தாள் மற்றும் 1/2 குடைமிளகாய், ஒரு வெங்காயத்தை மெலிதாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஒரு நிமிடம் கழித்து 2 டீஸ்பூன் சோயா சாஸ், 4 டீஸ்பூன் சில்லி சாஸ், 3 டீஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி, அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

2 டீஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்க விட்டால் சாஸ் கெட்டிப்பதமாக வரக்கூடும். சுவைக்கேற்ப சிறிதளவு உப்பையும் சேர்க்கலாம்.

கிரேவி பதத்துக்கு சாஸ் வந்தவுடன், பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கலக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவினால் டிராகன் சிக்கன் ரெடி.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...