இந்தியாவின் குளுகுளு இக்லூ ஸ்டே....
திகைப்பூட்டும் மணாலியில் உள்ள சேத்தன் பள்ளத்தாக்கின் பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளன இந்த வீடுகள்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இக்லூ வீட்டில் தங்குவது மட்டுமின்றி இங்கு கேம்ப்ஃபயர், சாகச விளையாட்டுகள், பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
இது இந்தியாவின் முதல் இக்லூ தங்கும் இடம் ஆகும். பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங் மற்றும் இக்லூ ஸ்டேக்கள் அனைத்தையும் அனுபவிக்க ஜனவரி-ஏப்ரல் சிறந்த நேரமாகும்.
பொதுவான கழிவறைகள், படுக்கைகள், சார்ஜிங் வசதிகள், போர்வைகள் போன்ற வசதிகளுடன் ஒரே நேரத்தில் ஒரு இக்லூவில் குறைந்தபட்சம் 2 நபர்களும் மற்றும் அதிகபட்சமாக 4 நபர்களும் தங்கலாம்.
உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மாலையில் இசையுடன் கூடிய கேம்ப்ஃபயரில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.
பயணிகள் தங்களுடைய வாகனங்களை முகாம் தளத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பார்க்கிங் இடத்தில் நிறுத்தலாம். செக்-இன் செய்த உடனேயே ஜம்ப்சூட் மற்றும் ஸ்னோஷூக்கள் வழங்கப்படும்.
மணாலியில் இரவு 8:30 மணியளவில் வெப்பநிலை -4 டிகிரியை எட்டுகிறது. மேலும், இது நள்ளிரவுக்குப் பிறகு -10 டிகிரியாக குறையும். இதனால், சுற்றுலாப் பயணிகளை சூடாக வைத்திருக்க, தூங்கும் பைகளை வழங்குகிறார்கள்.