அசத்தல் லுக்கில் மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் படத்தின் மூலமாக தமிழில் அனைவரிடமும் சீதாவாக பரிட்சயமாகியுள்ளார் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். இவரின், அன்புள்ள ராம்... எனத் துவங்கும் வரிகளை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.

திரைக்கு பின்னால் மட்டுமின்றி திரைக்கு முன்னாலும் அழகிய, அசத்தலான உடைகளால் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார் மிருணாள்.

விழாக்களின் போது லெஹங்கா மட்டுமின்றி விதவிதமான உடையில் பாரம்பரியம், ஸ்டைலிஷ் என ஒவ்வொரு முறையும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்.

சமீபத்தில், 'கும்ரா' பட பிரமோஷன் விழாவுக்கு, ஸ்லீவ்லெஸ் லாங்க் கவுன், பிளேஸர் என அசத்தினார். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த லாங்க் ஸ்கர்ட் பாதம் வரை நீண்டிருந்தது.

அதற்கேற்ப கருப்பு நிற பிளேஸர், அழகிய ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார். எளிய மேக்கப்பில் நியூடு லிப்ஸ்டிக்குடன் மாடர்ன் லுக்கில் ஸ்டைலிஷாக தோற்றமளித்தார்.

கொளுத்தும் வெயிலை சமாளிக்கும் வகையில் வெள்ளை நிற காட்டன் பேன்ட், கருப்பு நிற சட்டையுடன், குடையை பிடித்துக் கொண்டிருப்பது மிருணாள் தாக்கூருக்கு ஸ்டைலிஷான லுக்கை அளிக்கிறது.

டூனிக்ஸ் டாப்ஸ், பலாஸோ, துப்பட்டா என அசத்தும் மிருணாள் தாக்கூர். பர்கண்டி நிற கூந்தல் இவருக்கு அழகிய மார்டன் லுக்கை அளிக்கிறது.

எளிய கலர்புல் ஜம்ப்பிங் ஷூட்டில் ரிலாக்ஸ் செய்யும் மிருணாள் தாக்கூர்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...