ஜிபே, போன் பே, பேடிஎம் பயன்படுத்துகிறீர்களா? கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

டிஜிட்டலில் பணப்பரிமாற்றம் செய்வது எந்த அளவுக்கு எளிதாக உள்ளதோ, அதே அளவுக்கு அதில் மோசடிகளும், பணயிழப்பும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதை தடுக்க என்ன செய்வது? உங்கள் யுபியை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம்.

வங்கியிலிருந்து பேசுகிறோம், வாடிக்கையாளர் சேவையிலிருந்து பேசுகிறோம், காவல்துறையிலிருந்து பேசுகிறோம் என்று சொன்னால் கூட உங்கள் ஓடிபி எண்ணை பகிரக்கூடாது.

kyc நோக்கத்துக்காக உங்களின் ஃபோன் அல்லது கம்ப்யூட்டர் பயன்படுத்த அனுமதி கேட்டால், அது மோசடி நோக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

யுபிஐ பயன்படுத்துபவர்கள், அடிக்கடி உங்கள் பின் நம்பரை மாற்றிக் கொள்ளுங்கள். நீங்கள் வைக்கும் பின் நம்பர் எளிதில் யூகிக்க முடியாத அளவில் இருக்கட்டும்.

பொது இடங்களில் உள்ள வைஃபைகளை பயன்படுத்தும் போது, யுபிஐ மூலம் பணம் செலுத்துவதையும், வங்கி சார்ந்த செயல்பாடுகளையும் தவிர்த்திடுங்கள்.

ஆஃபர்கள் மற்றும் கேஷ்பேக் என கவரக்கூடிய விளம்பரங்களை கண்டு, அங்கீகரிக்கப்படாத ஆப்களை பயன்படுத்த வேண்டாம்.

நீங்கள் எந்த செயலியில் பணத்தை அனுப்புகிறீர்களோ அந்த செயலின் வாடிக்கையாளர் சேவை அல்லது உதவி குழுவை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...