உங்களுக்கு காபி ரொம்ப பிடிக்குமா? அப்போ கவனமாக இருங்க!

பொதுவாக, ஒரு கப் காபியில்.. அதாவது 250 மி.லி., காபியில் 80 முதல் 100 மி.கிராம் வரை கஃபைன் உள்ளது. ஒவ்வொரு வகை காபியிலும் கஃபைன் அளவு மாறுபடக்கூடும்.

ஒருவர் ஒரு நாளைக்கு 400 மி.கிராம் கஃபைன் உள்ள அளவுக்கு காபி குடித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படாது. அளவுக்கு அதிகமாக உடலில் சேரும்போது பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

தினமும் மூன்று கப்களுக்கு மேல் குடிக்கும் போது, அதாவது 300 மி.கிராம் அளவுக்கு மேல் கஃபைன் சாப்பிடும் போது குழந்தையின்மை பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

கருத்தரித்தாலும் கூட கருச்சிதைவுக்கான வாய்ப்புகள் உள்ளன. 600 மி.கிராம் ஆக அளவு அதிகரிக்கும் போது கருச்சிதைவின் பாதிப்பு இரட்டிப்பாகிறது.

குழந்தையை எதிர்நோக்கி இருக்கும் போது தினமும் 1 அல்லது 2 கப் (200 மி.கிராம்) அளவாக காபியை குறைத்துக் கொள்ளும் போது பாதிப்பின் தன்மையைக் குறைக்கலாம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

கர்ப்ப காலத்திலும் குறைந்தளவிலான காபியையே உட்கொள்ள வேண்டும். 200 மி.கிராம் அளவுக்கு மேல் கஃபைன் எடுக்கும் போது, குழந்தைகள் குறைவான எடையுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது.

காபி, டீ, குளிர்பானங்கள், எனர்ஜி பானங்கள், பிற பானங்களில் உள்ள கஃபைன் அளவு மாறுபடக்கூடும். சாக்லேட், மருந்துகள், பல்வேறு சப்ளிமெண்ட்ஸ் போன்ற உணவுப்பொருட்களிலும் கஃபைன் உள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...