மயோசிட்டிஸில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா சமந்தா?

தெலுங்கில் சகுந்தலம் படத்தை அடுத்த தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.

யசோதா என்ற படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார் சமந்தா.

இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், மயோசிட்டிஸ் பிரச்னை குறித்து ஒரு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்று தெரிவித்திருக்கும் சமந்தா, முன்பை விட எனது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதனால் கூடிய சீக்கிரமே இந்த நோயின் பிடியிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...