பப்பாளி விதையின் எண்ணற்ற நன்மைகள் !

பப்பாளி விதையில் இருக்கும் ஒலியிக் அமிலம் மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

பப்பாளி விதைகளில் உள்ள 'கரோட்டின்', ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கும். இதனால் மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி குறையும்.

இதில் உள்ள சத்துக்கள் சருமத்தின் ஈரப்பதம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, வயது முதிர்ச்சியால் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகாமல் தடுக்கும்.

உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து தலைக்குக் குளிக்கவும். வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முடி அடர்த்தியாக வளரும்.

பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் பூஞ்சை, பாரசைட்டுகள், ஈஸ்ட் போன்ற நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

பப்பாளி விதைகளை தினமும் ஒரு டீஸ்பூன் குறிப்பிட்ட காலம் மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகமாக உட்கொள்வதால் மலட்டுத்தன்மை ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...