மனித டிஎன்ஏ-வில் டேட்டா ஸ்டோரேஜ் எதிர்காலத்தில் சாத்தியப்படுமா?
நமது டாக்குமென்ட்கள், போட்டோ, வீடியோக்களைப் பாதுகாக்க இன்று மின்னணுப் பொருட்கள் சந்தையில் பல மின்னணு சாதனங்கள் உள்ளன.
இதுதவிர கூகுள் உள்ளிட்ட பல தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் கிளவுட் டேட்டா ஸ்டோரேஜ் வசதியை அளித்து வருகின்றன.
இதனால் தற்போது அமேசான் போன்ற பல ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் ஹார்ட் டிரைவ், சாலிட் ஸ்டேட் டிரைவ்களின் விற்பனை அதிகரிக்கிறது.
எதிர்காலத்தில் மனித டிஎன்ஏ மாலிகியூல்களில் டேட்டாக்களை ஸ்டோர் செய்ய முடியும் என்கின்றனர் உயிரியல் விஞ்ஞானிகள்.
ஆன்லைன் கிளவுட் டேட்டா-க்களை உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். எனவே இதற்கு வரவேற்பு அதிகரிக்கிறது.
.2025 ஆம் ஆண்டுதுவங்கி உலகம் முழுக்க உள்ள மனித இனத்துக்கு, ஆண்டுக்கு 160 செட்டாபைட் மின்னணு டேட்டா ஸ்டோரேஜ் தேவைப்படும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.