கோடையிலிருந்து தப்பிக்க... இங்கேயே இருக்கு குளுகுளு சுற்றுலா தலங்கள்!
டார்ஜிலிங்கில் கோடைகால வெப்பத்தை தணிக்கலாம். இங்கு காணும் இடமெல்லாம் பச்சைப்பசேல் தோட்டங்கள், காடு வழியாக செல்லும் ரயில் பயணம், ஆகியவை உள்ளன.
அனல் காற்று வீசும், வெயில் கொளுத்தும் காலத்தில் மணாலியில் அதற்கான சுவடே இருக்காது. டிரெக்கிங், பாராகிலைடிங், ராஃப்டிங் போன்ற சாகங்களை மணாலியில் நிகழ்த்தலாம்.
கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்த ஒரு அழகிய சுற்றுலா தலமாக மூணார் உள்ளது. தென்னிந்திய சுற்றுலா தலங்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று.
மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் வடகிழக்கு பகுதியில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாகும். இங்கு கண்டுகளிக்க பசுமை நிறைந்த சுற்றுப்புறம், ஏரிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இன்றைய இளைஞர்கள் பலரில் கனவு தேசமாக உள்ள இடம்தான் லடாக். உயரமான மலை தொடர்களை கொண்ட பகுதியாக இருப்பதால், இங்கு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஸ்கை தளங்களில் ஒன்று இந்த அவுலி நகரம். அவுலியில் மலையேற்றம், பனிச்சறுக்கு, ரோப்வேயில் சவாரி மற்றும் பல்வேறு சாகச நிகழ்வுகளை மேற்கொள்ளலாம்.
உலகின் சொர்க்கம் எனப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் முக்கிய கோடை சுற்றுலா தலமாக உள்ளது. தமிழக மக்களால் அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஊட்டியும் ஒன்று!