நல்ல தர்பூசணியை வாங்குவது எப்படி?
தர்பூசணி பழம் வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ எப்படி இருந்தாலும் பரவாயில்லை. அதில் புடைப்புகள், வெட்டுக்கள் இருக்கக் கூடாது. சீரான வடிவத்தில் இருக்க வேண்டும்.
தர்பூசணியின் அளவுக்கு ஏற்ற கனம் கொண்ட பழத்தை தேர்ந்தெடுங்கள். சில பழங்கள் பார்க்க பெரியதாக இருப்பினும், கையில் எடுத்தால் அதேகேற்ப எடை இருக்காது; இதுபோன்ற பழத்தை தவிர்க்கவும்.
தர்பூசணியை சுற்றி மஞ்சள் நிறப் புள்ளி இருக்கிறதா எனத் தேடுங்கள். இது கொடியின் உச்சக்கட்ட முதிர்ச்சியை குறிக்கும். ஆனால், வெள்ளை நிற புள்ளிகளை கண்டால் அதை தவிர்க்கவும்.
உங்கள் கையால் தர்பூசணியைத் தட்டி பாருங்கள். அப்போது ஆழமான சத்தம் வந்தால் அது பழுத்த பழம். அதிக பழுத்த பழம் என்றால் வெற்று அல்லது தட்டையாக ஒரு சத்தம் வரும்.
நன்கு பழுத்த தர்பூசணியானது எளிதில் கீற முடியாத உறுதியான தோலைக் கொண்டிருக்கும்.
ஒரு தர்பூசணியின் காம்பு என்பது அறுவடையின் போது வெட்டப்பட்ட தண்டு. உலர்ந்த தண்டு பொதுவாக பழுத்த தர்பூசணியை குறிக்கிறது.