பிளாக் அண்ட் ஒயிட் லெஹங்காவில் ரகுல் பிரீத் சிங்கின் அசத்தல் லுக்

தடையற தாக்க, தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் என்.ஜி.கே., என தமிழில் கணிசமான படங்களில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக உள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

பாலிவுட் படங்களில் பிஸியாக உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் ரகுல்.

பிரபல பேஷன் டிசைனர் சீமா குஜ்ரால் வடிவமைத்த லெஹங்காவை அணிந்தவாறு அசத்தலான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ரகுல்.

வெள்ளி ஜரிகையில் எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேஷனில் உள்ளது இந்த லெஹங்கா. இதற்கேற்ப வளையல், நெக்லஸ், மோதிரங்கள், தாழ்வான போனிடெயில் என அசத்துகிறார்.

பழுப்பு, தங்க நிற நிறத்தில் சிக்கலான ஜரிகை வேலைப்பாடுகளுடன் பேஷன் டிசைனர் தருண் தஹிலியான் வடிமைத்த ஷராராவில், ஜூம்கா காதணிகள், மோதிரங்கள் என ஒய்யாரமாக அசத்தல் போஸ் தரும் ரகுல்.

இன்றைய டிஜிட்டல் உலகில் சில மாற்றங்களை புகுத்தும் போது புடவையில் கூட மாடர்ன் லுக் தரலாம். இதற்கு உதாரணமாக பாயல் கந்தவாலா வடிவமைத்த அழகிய புடவையில் ஜொலிக்கும் ரகுல்.

ஃபுல் ஸ்லீவ், குளோஸ் நெக் என மேட்சிங் பிளவுஸ், தொங்கும் காதணிகள், நியூடு லிப்ஸ்டிக் என அல்ட்ரா மாடர்ன் மங்கையாக அசத்தல் போஸ் கொடுத்துள்ளார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...