இளந்தாரிகளை வலிமையாக்கும் மாப்பிள்ளை சம்பா
மாப்பிள்ளை போல் மிடுக்குடன் வலம் வர மாப்பிள்ளை சம்பா உதவும் என்று வழக்குமொழி உண்டு.
சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பாவில், புரதம், நார்ச்சத்து, இரும்புச் சத்து, துத்தநாக சத்து உள்ளிட்டவை உள்ளன.
இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது
மாப்பிள்ளை சம்பா அரிசியில் 'கிளைசெமிக்' அளவு குறைவாக உள்ளதால், நீரிழிவு கொண்டோர் சர்க்கரையின் அளவை குறைப்பதற்குப் பயன்படுகிறது.
நோய்எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள், அடிக்கடி இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும், கருவுறுதலை அதிகரிக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.
வாரத்தில் இரண்டு நாட்களாவது இந்த அரிசியைக் கொண்டு உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகளைப் பெறலாம்.