பெண்களின் ஃபேவரைட் ஒன் பீஸ் கவுன்கள்...!

முன்பக்கத்தில் ஃப்ரில்களுடன் இருக்கும் ஒன் பீஸ் கவுன் ட்ரெஸ், ஹாப்ஃ லெங்த் மற்றும் ஃபுல் லெங்த்திலும் கிடைக்கும். இதற்கு துப்பட்டா அணிய தேவையில்லை. விருப்பப்பட்டால் ஸ்டோல் அணிந்து கொள்ளலாம்.

பெல்ட் ஒன் பீஸ் கவுன், மெல்லிய பெல்ட்டுடன் சேர்ந்து வரும். பெல்ட்டுடன் அணிந்தால் டீசண்ட் லுக் தரும். கிராண்ட் ஆக உடை அணிய விரும்பாதவர்கள் இந்த கவுனை அணிந்து கொள்ளலாம்.

ஓபன் காலர் நெக் மற்றும் கவுனுடன் இணைக்கப்பட்ட பெல்ட், ஷார்ட் ஸ்லீவுடன் உள்ளது. நண்பர்களுடன் ஷாப்பிங் செய்ய கிளம்பினால், இது சரியான தேர்வாக இருக்கும்.

நீளமாக பாதம்வரை தரைதொட்டு இருக்கும் லாங் ஃப்ளோயி ஒன் பீஸ் கவுன்கள், பார்ட்டி மற்றும் ஸ்பெஷல் அக்கேஷன்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மெட்டர்னிட்டி ஒன் பீஸ் கவுன்கள், புது தாய்மார்களுக்கும் கிடைக்கிறது. ஃபீடிங் செய்யும் தாய்மார்களின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...