தமிழகத்தில் 2023- 24ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை பச்சை துண்டு அணிந்து தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்.

உலக சந்தையில் தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட, ரூ.130 கோடி மதிப்பீட்டில் வாழைக்கான தனி தொகுப்பு திட்டம்.

தண்ணீர் பற்றாக்குறை பகுதிகளில் 53400 ஹெக்டேர் நுண்ணீர் பாசன முறையினை நிறுவுவதற்கு மானியமாக ரூ.450 கோடி ஒதுக்கீடு.

காவிரி டெல்டா பகுதியில் திருச்சி - நாகை இடையே வேளாண் தொழில் பெருந்தடம் அமைக்க, 1,000 கோடி ரூபாய்.

ரூ.50 கோடிக்கு மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, தேனி வளர்ப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன்.

தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஹெக்டேரில் சாகுபடியை உயர்த்த ரூ.11 கோடி.

ரூ.33 கோடி நிதி ஒதுக்கீட்டில் சூரியகாந்தி, நிலக்கடலை உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம்.

தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து பரவலாக்கிட 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி.

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், வானிலை முன்னறிவிப்புகள் போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்படும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...