கோடைக்கால நோய்த் தாக்கத்தைத் தடுக்க இதைச் செய்யுங்க...

60 வயது கடந்தவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியே வர நேரிட்டாலும் குடை எடுத்துச் செல்வது நல்லது.


கோடையில் சால்மோனெல்லா, குளோஸ்ட்ராடியம் உள்ளிட்ட நுண்கிருமிகளின் பெருக்கத்தால், உணவு நஞ்சாகும் வாய்ப்பு அதிகம். எனவே, வெளி உணவுகளை தவிர்த்து வீட்டில் மட்டுமே சாப்பிடுவது நல்லது.

சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் கொப்புளங்கள் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க லோஷன்களை பயன்படுத்தலாம்; தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்து ஊறவைத்த பின் குளிக்கலாம்.

கோடை காலத்தில் பரவும் உயிர்கொல்லி நோய் என்றால் அது சின்னம்மைதான். தும்மல், இருமல் மூலம் பரவும். சிறு குழந்தைகளையே இந்த நோய் அதிகம் தாக்கும் என்பதால் கவனம் தேவை.

கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை அசுத்தமான உணவு மற்றும் குடிநீரால் பரவும் நோய். ஹெபடைடிஸ் ஏ வைரஸ் தாக்கம் காரணமாக இது பரவும். சுகாதாரமான உணவகங்களில் உணவு சாப்பிடுவதால் தவிர்க்கலாம்.

மதுப்பழக்கம் கொண்டவர்கள் கோடை காலத்தில் ஆல்கஹால் அளவைக் குறைப்பது நல்லது. இதனால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

கை, கால்களை அவ்வப்போது சுத்தமாக சோப்பு போட்டு கழுவவேண்டும். மேலும், காலை, மாலை இருவேளையும் குளிப்பதால் உடலை வியர்வை துர்நாற்றம் மற்றும் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...