உலகை சுற்றி வரும் நிலவு அருங்காட்சியகம்: கண்கொள்ளா காட்சி.

நிலவு பல கோடி ஆண்டுகளாக பூமியை சுற்றி வருவதை போல், பல்வேறு நாடுகளை சுற்றிவருகிறது இந்த நிலவு அருங்காட்சியகம்.

இங்கிலாந்தை சேர்ந்த லூக் ஜெர்ராம் என்ற கலைஞர் 2016ல் இந்த உலகைச் சுற்றி வரும் அருங்காட்சியத்தை தொடங்கினார்.

இந்த அருங்காட்சியகத்தில் நிலவைப் போலவே வடிவமைக்கப்பட்ட பெரிய சிலை ஒன்று உள்ளது.

இது விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நிலவைப் பற்றி ஆராயும் பொழுது எடுத்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

மனிதநேயத்தை பிரதிபலிக்கும் வகையிலும், உலக மக்கள் அனைவரின் நம்பிக்கை ஆக நிலவு இருப்பதாக ஜெர்ராம் கூறுகிறார்.

பூமியின் இயற்கை கோலான நிலவை விட 5 லட்சம் மடங்கு சிறிய உருவிலான நிலவு பிரதியைக் கொண்டது இவ்வருங்காட்சியம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...