குறைந்த பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிக்கும் வால்பேப்பர்கள்
வால்பேப்பர்கள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில், மெல்லிய டிசைன்கள் கொண்டிருந்தால் ஹாலுக்கு மேஜிக்கல் ஃபீல் தரும். ஹாலில் உள்ள பொருட்கள், தரையின் நிறம், பர்னிச்சரின் நிறம் ஆகியவற்றை பொறுத்து வால்பேப்பரை தேர்வு செய்யுங்கள்.
பெட்ரூம் வால்பேப்பர்கள் பீச், பழுத்த, கிரீம் அல்லது பிளாக் அண்ட் ஒயிட் போன்ற நியூட்ரல் நிறங்களில் இருந்தால் நன்றாக இருக்கும். அறை, கட்டில், டேபிள், கப்போர்ட் ஆகியவற்றின் வண்ணங்களோடு ஒத்துப்போக வேண்டும்.
கிச்சனுக்கு வினைல், நோவாமுரா, வாஷபிள் ஆகிய மூன்று வகை வால்பேப்பர்கள் பயன்படுத்தலாம். இவற்றை சுத்தம் செய்வது எளிது, எளிதில் அழுக்கும் படியாது. சமையல் தொடர்பான படங்களை கொண்ட வால் பேப்பரை பயன்படுத்தலாம்.
குழந்தைகள் அறையில் ஒட்டப்படும் வால்பேப்பர்கள் சற்று வேடிக்கையாகவும் வண்ணமயமாகவும் இருக்க வேண்டும். அவர்கள் விரும்பும் விஷயங்கள், பிடித்த கார்ட்டூன் கேரக்டர்கள் வால்பேப்பரில் இடம் பெற்றிருக்கலாம்.