”இணையதளத்தில் சாட்பாட் செயலியை தவிருங்கள்” : ஆய்வாளர்கள் எச்சரிக்கை
ஒரு நிறுவனத்தின் இணையதளம் அல்லது செயலியில் சாட்பாட் பயன்பாட்டை தவிர்க்குமாறு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இணையதளத்தில் எழுப்பப்படும் கேள்விக்கு, எதிர்முனையில் இருந்து உரையாடுவது போன்று பதிலளிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தான் சாட்பாட் செயலி.
ஏ.ஐ சாட்பாட்களை பயன்படுத்துவதன் மூலம் எது உண்மையானது, சட்டபூர்வமானது மற்றும் எது அச்சுறுத்தல் என்பதைக் கூறுவது மிகவும் கடினம்.
இந்த சாட்பாட்கள், தகவல்களைப் பெற, மோசடி செய்ய, தனிப்பட்ட தகவல்களை மாற்ற, நிறுவனங்களின் அதிகாரபூர்வ ஆட்கள் போல ஆள்மாறாட்டம் செய்யலாம்.
இந்த புதிய அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க, தேவையற்ற மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இணைப்புகளைக் கிளிக் செய்வதற்கு முன் சிந்திக்குமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், கணினியில் மால்வேர்களை கண்டறிய கூடிய பாதுகாப்பு மென்பொருள் அப்டேட் செய்யப்பட்டிருப்பதுடன், முழு தொகுப்பையும் வைத்திருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.