டில்லியின் பேமஸான மொஹப்பத் கா சர்பத் சில்லுன்னு குடிக்கலாமா?

தர்பூசணி பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதிலுள்ள விதைகளை நீக்கிக் கொள்ள வேண்டும்.


காய்ச்சி ஆற வைத்த 1/2 லிட்., பாலை பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சிபடுத்தவும்.

பின், ஒரு பவுலில் பாலுடன் பொடித்த சர்க்கரை, ரோஸ் சிரப் தலா 2 டே.ஸ்பூன் வீதம் சேர்த்து நன்றாக கலக்கி ரோஸ்மில்க் தயாரிக்கவும்.

தேவையான அளவு ஐஸ்கட்டிகளையும் சேர்க்க வேண்டும். இனிப்புச் சுவையை விரும்புபவர்கள் கூடுதலாக சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.


தொடர்ந்து, ரோஸ்மில்க்கில் நறுக்கிய தர்பூசணித் துண்டுகளை சேர்த்து கலக்கினால், சுவையான டில்லியின் பிரபலமான மொஹப்பத் கா சர்பத் ரெடி.

கொளுத்தும் வெயிலுக்கு சில்லென்று குடித்துக் கொண்டே தர்பூசணி பழத்தை சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே தனிதான். செய்வதும் மிகவும் எளிதானதே.

ஒரு டீஸ்பூன் ஊற வைத்த சப்ஜா விதைகளையும் இந்த சர்பத்தில் சேர்த்தால் சுவை கூடுதலாக அள்ளக்கூடும்; ஆரோக்கியமும் மேம்படும்.


Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...