ட்ரெண்டாகும் சாரி பெல்ட்ஸ்...!
மேட்சிங் மேட்சிங் பெல்ட், புடவைகளின் பார்டர் நிறத்தில் அல்லது புடவையின் டிசைன்களைப் போன்ற வடிவமைப்பில் இருந்தால் அம்சமாக இருக்கும். ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்தால், பெல்ட் நிச்சயம் உங்களை ஹைலைட்டாகக் காட்டும்.
பார்ட்டி மற்றும் மாலைநேர நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது டிசைனர் சேலை மற்றும் ட்ரெண்டி பிளவுஸுடன் மெட்டாலிக் பெல்ட் அணிந்தால் பொருத்தமாக இருக்கும். இவை பிங்க், பிரவுன், சில்வர், காப்பர், கோல்டன் நிறங்களில் கிடைக்கும்.
புரொஃபஷனல் லுக் பிரியைகள் உங்கள் பிளவுஸை ஓவர் கோட் போன்று வடிவமைத்து அதற்கு மேட்சிங்காக பெல்ட் அணிந்து கொள்ளலாம். ப்ளேசர் அல்லது ஓவர் லே அணிந்து பெல்ட் அணியும்போது இண்டோ வெஸ்டர்ன் லுக் கிடைக்கும்.
பிளவுஸ் டிசைன்கள் அல்லது நிறத்திற்கு ஏற்ப பெல்ட்டுகளை வடிவமைத்து அணியலாம். இது ஃபுல் ஹேண்ட் பிளவுஸுடன், பிளெய்ன் புடவைகளுக்கு கச்சிதமாக பொருந்தும். மேலும், பட்டை அளவு பெரிதாக வைத்து அணிந்தால் ராயல் லுக் கிடைக்கும்.