பிரமிக்க வைக்கும் உலகின் அழகான நாடுகள்!
அழகிய நதி பள்ளத்தாக்குகள், புல்வெளிகள் மற்றும் கடற்கரைகள் என இயற்கையால் நிறைந்து நம் கற்பனையை தாண்டிய அழகை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இடம் தான் கோஸ்டாரிக்கா.
ஜப்பான் இயற்கை அழகு மற்றும் நகர வாழ்க்கை இரண்டும் கலந்த இடம். அழகான மூங்கில் காடுகள், துடிப்பான செர்ரி மலர்கள், உயரமான புஜி மலை மற்றும் பல இடங்கள் ஜப்பானில் உங்களுக்காக காத்திருக்கும்.
காதலர்களின் தேசம் என்று அழைக்கப்படும் பிரான்ஸ் லாவெண்டர் வயல்கள் முதல் திராட்சைத் தோட்டங்கள் வரை, பேக்ஹவுஸ்கள் முதல் அருங்காட்சியகங்கள் வரை இங்கு ஒவ்வொரு இடமும் அழகு நிறைந்துள்ளது.
இந்தோனேஷியா பல தீவுகள், யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட தலங்கள், பசுமையான வெப்பமண்டல காடுகள், ஆச்சரியமூட்டும் பல்லுயிர்ப் பகுதிகள் போன்றவற்றின் தாயகமாக உள்ளது.
கலாசாரம், கட்டடக்கலை, சதுப்புநில காடுகள், தார் பாலைவனம், கங்கை நதி , நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை பாதுகாக்கும் இமயமலை , பசுமை போர்த்திய மேற்குத் தொடர்ச்சி மலை , கடற்கரைகள் என இந்தியாவில் உள்ளது.
தீவு நாடான மாலத்தீவு உலகிலேயே மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. ஆடம்பர ரிசார்ட்கள்,தண்ணீர் விளையாட்டுகள், அழகிய கடற்கரைகளை நீங்கள் இங்கே கண்டு ரசிக்கலாம்.
இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற மற்றொரு இடம் தான்சானியா. இங்குள்ள பிரபலமான செரெங்கேட்டி வனப்பகுதி உங்களுக்கு சிறந்த ஒரு காடுகள் அமைப்பின் அனுபவத்தை அளிக்கும்.
உலகில் அதிகம் விரும்பப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக அறியப்படும் தாய்லாந்து, நகர வாழ்க்கை மற்றும் கடற்கரைகளுக்கு பிரபலமானது.
நியூசிலாந்தில் உயர்ந்த மலைகள், காடுகள் மற்றும் பாயும் நீர்வீழ்ச்சிகளால் நிறைந்துள்ளது. வண்ண அரண்மனைகள், டெக்காபோ ஏரியின் ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிற லூபின்கள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம்.