2022ல் விற்பனையான டாப் 10 கார்களில் 7 மாருதி உடையவை.

2022ல் இந்தியாவில் விற்பனையான டாப் 10 கார்களில் 7 இடங்களை மாருதி வசப்படுத்தியுள்ளது.

வேகன்ஆர் முதலிடத்தில் உள்ளது. 2,17,317 வேகன்ஆர் 2022ல் விற்பனையாகியிருக்கிறது. இது 2021ஐ காட்டிலும் 18% அதிகம்.

இரண்டாவது இடத்தை மாருதி சுசூகியின் பலேனோ பெற்றுள்ளது. இது 2021ல் 3ம் இடத்தில் இருந்தது.

மூன்றாவது இடத்தில் ஸ்ப்விட் உள்ளது. இதன் விற்பனை 1% அதிகரித்து 1,76,424 ஆக உள்ளது.

நான்காவது இடத்தில் டாடா நெக்ஸான் உள்ளது. 2021 உடன் ஒப்பிடும் போது அபார முன்னேற்றம். விற்பனை 55% வளர்ந்து 1,68,278 கார்களாக உள்ளது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தை மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்டோ மற்றும் டிசையர் பெற்றுள்ளன.

7வது இடத்தில் ஹூண்டாயின் க்ரெட்டா உள்ளது. இதன் விற்பனை 12% உயர்ந்து 1,40,895 ஆக உள்ளது.

8வது இடத்தை மாருதியின் எர்டிகா எட்டிப்பிடித்துள்ளது. 7 சீட்டர் கார் ஆன இதன் விற்பனை 17% உயர்ந்துள்ளது.

9வது இடத்திலும் மாருதியின் தயாரிப்பான ப்ரீசாவே உள்ளது. விற்பனை 12.6% கூடியுள்ளது. 2022ல் 1,30,563 கார்கள் விற்றுள்ளது.

10வது இடத்தில் டாடாவின் பஞ்ச் உள்ளது. விற்பனை 22,571ல் இருந்து 5 மடங்கு உயர்ந்து 2022ல் 1,29,895 ஆக உள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...