180 மாதங்களில் கோடீஸ்வரர் ஆவது எப்படி? 15*15*15 ரூல் பாலோ பண்ணுங்க!
மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரராகி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை நிஜமாகக் கூடிய ஒன்று தான்.
15×15×15 என்ற விதிப்படி அதை அடையலாம். விடாமுயற்சியும், துல்லியமான கணிப்பும், சிறிது மெனக்கடலும் இருந்தால் போதும்.
ஆண்டுக்கு 15% வருமானம் தரும் முதலீட்டுச் சாதனங்களில், மாதம் ரூ.15 ஆயிரத்தை, 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வந்தால், ரிட்டர்ன் ஆனது சுமார் ஒரு கோடியை எட்டியிருக்கும்.
இன்றைக்கு 15% வளர்ச்சி என்பது பங்குச்சந்தை மற்றும் பங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் மட்டுமே சாத்தியம்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தையில் உள்ள மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் பலவும் ஆண்டுக்கு 10 முதல் 20% ரிட்டர்ன் வரை வழங்கியுள்ளன.
ஆனால் முந்தைய ரிட்டர்னையே அவை எதிர்காலத்திலும் கொடுக்குமா என்பது உறுதி கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும்.
அப்புறம் என்ன வருங்கால கோடீஸ்வரர்களே... அடிச்சுக்கோங்க சியர்ஸ்.