இனி பேட்டரிக்கு 'குட் பை'...வரப்போகுது செல்ஃப் சார்ஜிங் ரிமோட்!

ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் டிவி ரிமோட் தயாரிக்கும் டிடபிள்யூ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தானாகவே சார்ஜ் ஏறும் ரிமோட் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டில் பெரும்பாலான மக்கள் சாதாரண டிவியிலிருந்து ஸ்மார்ட் டிவிக்கு மாறிவிட்டனர்.

ஸ்மார்ட் டிவிக்களுக்கு மக்கள் மாறினாலும், டிவிகளுக்கு பயன்படுத்தும் ரிமோட்களுக்கு அவ்வபோது பேட்டரி மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.

இதற்கு தீர்வாக தானாகவே சார்ஜ் ஆகிக்கொள்ளும் ரிமோட் ஒன்றை டிடபிள்யூ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

ரிமோட் அடியில் உள்ள பேட்டரி மேலே ஃபோட்டோவோல்டாயிக் பேனல், வழியாக வெளிச்சம் மூலமாகவே நமது ரிமோட் தானாக சார்ஜிங் ஆகுமாம்.

இதனை சோலார் பேனல் தயாரிக்கும் எக்ஸேகர் நிறுவனம் மற்றும் கூகுள் டிவி உடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இதேபோல புதிய டெக்னாலஜி ஒன்றை அமேசான் போன்ற நிறுவனங்கள், ஃபையர் டிவி ரிமோட் உடன் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேட்டரி எப்போது கூகுள் டிவிக்கு உள்ளே அறிமுகம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகவில்லை.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...