கழுத்தை நெரிக்கும் சுற்றுலா இஎம்ஐ; ஹனிமூன் தம்பதிகள் உஷார்!

இன்றைய நவீன உலகில் உலக சுற்றுலாவுக்கு இந்திய நடுத்தர வர்க்கத்தினர் பலரும் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

இன்றைய நவீன உலகில் பிரான்ஸ், கிரீஸ், ஆஸி., தாய்லாந்து உட்பட பல்வேறு உலக நாடுகளுக்கு ஹனிமூன் செல்ல புதுமணத் தம்பதிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்காக, தவணை முறை திட்டத்தை சுற்றுலா நிறுவனங்கள் பல அறிமுகப்படுத்தத் துவங்கிவிட்டன. திருமணக் கடன் எடுத்த காலம்போய், தேனிலவு கடன் எடுக்கும் காலம் வந்துவிட்டது.

சுற்றுலா பட்ஜெட்டான 4 லட்ச ரூபாயில், 2 லட்சம் கையில் இருந்தால் போதும்; மீதித்தொகையை இஎம்ஐ முறையில் அடைத்துவிடலாமே, என நடுத்தர வர்க்க புதுமணத் தம்பதிகள் நினைக்கின்றனர்.

ஆனால், இது ஒரு மாயவலை என்பதை பலரும் அறிவதில்லை. திருமணம் முடிந்து அடுத்த சில ஆண்டுகளில் இந்தக் கடனைக் கட்ட முடியுமா என அப்போது சிந்திப்பதில்லை.

திருமணமாகி அடுத்த ஆண்டே குழந்தை பிறந்தால் அதற்கான செலவுகள், இதர செலவுகள் என எதையும் சிந்திக்காமல், இந்த சுற்றுலா இஎம்ஐ வலையில் விழுவதால் அன்றாட வாழ்க்கை நரகமாகிறது.


பொருளாதார சிக்கலால் கணவன், மனைவிக்கிடையே சிறு உரசல்கள் ஏற்பட்டு அது பெரும் விரிசலுக்கு வழி வகுக்கும்.

எனவே, சேமிப்பின் மூலமாகவே உங்களது உலக சுற்றுலாக் கனவை நனவாக்க முடியும் என்பதை உணர்ந்தால், மாதாமாதம் கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை இன்றி நிம்மதியாக வாழலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...