ஷில்பாவின் பாரம்பரியம் மாறாத பேஷன்... இப்போ டிரெண்டிங்கில் !

பேஷன் உடைகள் என்றாலே பலரது நினைவுக்கு வருபவர் ஷில்பா ஷெட்டி. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், இன்னமும் அழகு, ஆரோக்கியத்துடன் உற்சாகமாக வலம் வருகிறார்.

ரசிகர்களின் மனதை கவரும் வகையில், விதவிதமான பேஷன் உடைகளில் உலாவருவது, 47 வயதான இந்த 90ஸ் நாயகி ஷில்பாவின் வழக்கம்.

மாடர்ன் உடைகள் மட்டுமின்றி, புடவைகளிலும் அவ்வப்போது பாரம்பரியம் மாறாமல் நவீனத்தை புகுத்தி, ஸ்டைலிஷான தோற்றத்தில் காட்சியளிப்பார்.

இதை பார்க்கும்போது, புடவையைக் கூட இவ்வளவு மாடர்னாக அணிய முடியுமா, என ஆச்சர்யம் கலந்த ஏக்கப்பார்வை பலருக்கும் எழுவதில் வியப்பில்லை.

சமீபத்தில் நடந்த விழாவில் பாரம்பரியத்தை விட்டுத்தராமல் இளஞ்சிவப்பு நிற புடவையுடனும், அதேவேளையில், இன்றைய டிரெண்டுக்கேற்ப அழகிய வெல்வெட் ஓவர்கோட்டும் அணிந்து உற்சாக நடைபோட்டார்.

கழுத்து, கைப்பகுதிகளில் கோல்டன் நிறத்தில் அழகிய மெல்லிய எம்பிராய்டரி வேலைப்பாடுகளுடன், முழங்கால்கள் வரை நீண்டு தொங்கும் வகையில் அந்த ஒவர்கோட் வடிவமைக்கப்பட்டிருந்தது.

புடவைக்கு போட்டியாக முத்து, மரகதம் மற்றும் வைரகற்களால் அலங்கரிக்கப்பட்ட மகாராணி நெக்ல்ஸ் மற்றும் வளையல்கள் அணிந்து ஜொலித்தார் ஷில்பா.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...