இந்தியாவில் இருந்து சாலை வழியே வெளிநாட்டு பயணம்!

நீண்ட சாலைப் பயணங்கள் சிலருக்கு கனவு சுற்றுலா போன்றது. அவர்களது வாகன ஓட்டும் திறனை வெளிப்படுத்த உதவும் அழகிய தருணமாகவும் அது இருக்கும்.

இந்த நீண்ட பயணம் வெளிநாட்டை தொடும் என்றால் உலகம் சுற்றிய ஆனந்தத்தை கொடுக்கும்.

நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய தனி நாடாகும். டில்லியில் இருந்து காத்மாண்டுக்கு காரில் செல்ல சுனாலி எல்லையை அடைய வேண்டும்.

மியான்மர் நாடு பஙக்ளாதேஷ், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இடையில் எல்லையை பகிர்கிறது. சாலை வழியாக செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படும்.

இந்த நாட்டின் வடக்கில் மியான்மர் உள்ளது. ஒரு மாற்றத்திற்காக விமானத்தை தவிர்த்து தாய்லாந்திற்கு சாலை வழியாக செல்லலாம்.

தாய்லாந்து வரை செல்பவர்கள் தங்கள் பயணத்தை நீட்டிக்க நினைத்தால் மலேசியாவும் செல்லலாம். பாஸ்போர்ட், விசா அவசியம்.

பூட்டானுக்கும் இந்தியஙே அரசிற்கும் உள்ள ஒப்பந்தத்தின் படி அங்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் செல்லலாம். சாலை வழியாக செல்வது சுவாரசியமான சுற்றுலாவாக இருக்கும்.

ஆண்டில் எந்த நேரத்திலும் சுற்றுலா செல்லக்கூடிய இடம் வங்கதேசம். டாக்கா-சிட்டகாங் நெடுஞ்சாலை வழியாக இங்கு செல்லலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...