'கிரைப் வாட்டர்' என்னும் பூச்சிக் கொல்லி மருந்து

குழந்தை அழுதாலே 'கிரைப் வாட்டர் கொடு... நீ, குழந்தையாக இருந்தப்ப அது தான் கொடுத்தேன்' என அழும் குழந்தைக்கு, கிரைப் வாட்டர் தரச் சொல்வது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இதை தருவதால் எவ்வித பலனும் கிடைக்காது என்பதோடு, குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடியது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் சேர்க்கப்படும் ரசாயனப் பொருளான 'புரோனோபோல்' அதிக நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி. இதனால், குழந்தைகளுக்கு, பின்னாளில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது, செரிமான மண்டலத்தில் தீவிர நச்சுத் தன்மையை ஏற்படுத்தும்; உடல் எடை குறையும்; கேன்சர் வருவதற்கான அபாயம் அதிகம்; சில சமயங்களில் இறப்பையும் ஏற்படுத்தலாம்.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த ரசாயனம் கிரைப் வாட்டரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மற்ற வேதிப்பொருட்களான, 'மெத்தில் பாராபென், நாபென்சோயேட்' போன்றவையும் அபாயமானது.

புரோனோபோல் குறித்து, ஆய்வுக் கூடத்தில், விலங்குகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், தொடர்ந்து இதை பயன்படுத்தினால், தோலின் மேல்புறத்தில் நச்சுத் தன்மை உண்டாகிறது.

தொடர்ந்து எலிகளுக்கு 90 நாட்கள் இந்த வேதிப் பொருளை கொடுத்ததில், தீவிரமான செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தியது. நாய்களுக்கு கொடுத்த போது கல்லீரல், மண்ணீரல் வீக்கம் ஏற்பட்டு உள்ளது.

முயல்களுக்கு பரிசோதித்ததில், அதன் உடல் எடையில், 1 கிலோவுக்கு 2 மி.கி அளவில் நச்சு சேர்ந்துள்ளது. நீண்ட நாட்கள் கொடுத்ததில், வயிற்றில் புண் ஏற்பட்டதுடன், கேன்சர் செல்களும் உருவாகின.

25 ஆண்டுகளுக்கு முன்பே இது குறித்த ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. விளம்பரங்களைப் பார்த்து கிரைப் வாட்டர் தருவதை தவிர்க்க வேண்டும் என்கிறார் குழந்தைகள் நல டாக்டர் அருண்பாபு.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...