புடவை லெஹங்கா... இப்போ ஹாட் டிரெண்டிங் !

புடவைக்கு அடுத்தபடியாக லெஹங்கா, லாங்கவுன்களை அணிவது தற்போது பேஷனாகிவிட்டது.

டீனேஜ் பருவத்தினர் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் இவற்றை அணியத் துவங்கிவிட்டனர்.

அணிவதற்கு எளிதாகவும், ஸ்டைலாகவும் இருப்பது மட்டுமின்றி, பட்ஜெட் செலவும் எகிறாமல் இருப்பதால் தற்போது புடவை லெஹங்கா ஹாட் டிரெண்டாக உள்ளது.


உங்களின் லெஹங்காவுக்கு மேட்சிங் ஆன பட்டுப்புடவையை எடுத்துக் கொள்ளவும். முதலில் லெஹங்காவை அணியவும்.


பின்னர், புடவையின் முந்தானைப் பகுதியில் மடிப்புகளை 'பின்' செய்து கொள்ளவும். மீதமுள்ள புடவையை சிறிய மடிப்புகளாக எடுத்து, இடுப்பின் நடுப்பகுதி வரை இழுத்து செருக வேண்டும்.

அவ்வளவுதான் இப்போது ஸ்டைலிஷான தோற்றத்தில் விழாக்களில் உற்சாகமுடன் வலம் வரலாம். இடுப்பின் ஒரு பக்கத்தில் மட்டுமே புடவையின் மடிப்புகள் தெரியக்கூடும்.

இடப்பக்கத்தில் லெஹங்கா மட்டுமே இருக்கும். இந்த ஸ்டைலில் பட்டுப் புடவை அணிந்தால் ஸ்டைலிஷான மற்றும் ரிச் லுக் கிடைக்கக்கூடும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...