அசத்தலாக சிலம்பம் கற்பிக்கும் கன்னிகா சினேகன்
பிரபல சின்னத்திரை நடிகை கன்னிகா, பாடலாசிரியர் சினேகனின் மனைவி ஆவார். இவரின் நீளமான கூந்தலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அழகிய நீளமான கூந்தலை பார்ப்பதற்காகவும், கூந்தல் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காகவும் பிரமிப்புடன் பலரும் இவரை பின் தொடர்கின்றனர்.
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது இவர், புகைப்படம், வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
ஓவியக்கலைஞரான கன்னிகா விதவிதமாக ஓவியங்களை வரைந்து தள்ளும் வீடியோக்கள் ஏராளமாக இதில் இடம்பெற்றிருக்கும்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தை மாணவிகளுக்கு கற்பிக்கும் வீடியோவை நேற்று பதிவிட்டுள்ளார்.
அதில் மாணவிகள் மூன்று பேருக்கு, கட்டடட்த்தின் மீது நின்று கொண்டு கம்பை பிடிப்பது, சரியான நிலையில் நிற்பது மற்றும் சுழற்றும் முறைகள் குறித்த அடிப்படை பயிற்சியை அளிக்கிறார்.
தொடர்ந்து, கன்னிகாவும் அசத்தலாக கம்பை சுழற்றுகிறார். இந்த வீடியோவுக்கு பலரும் 'லைக்'குகளை அள்ளிக்குவித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
'அடுத்த தலைமுறைக்கு பாரம்பரிய கலையை கற்பிக்கும் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோதரி' என பலரும் கமெண்டுகளை கூறி வருகின்றனர்.