குந்தவை, நந்தினியின் நகைகள் விற்பனைக்கு வந்தாச்சு

ஒரு காலத்தில் திரைப்படங்களில் நடிகைகள் அணியும் புடவைகள், பிளவுஸ்கள் மற்றும் நகைகள் பிரபலமாகும்.

முன்பு சரோஜா தேவி புடவைகள் என்று விற்கப்பட்டது, பின், நதியா கம்மல், நதியா வளையல், குஷ்பு ஜாக்கெட் பிரபலமானது. இப்போது... பொன்னியின் செல்வனின் சோழா நகைகள்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் விதவிதமான நகைகளை அணிந்து நடித்துள்ளனர்.


அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள் நிறைய நகைகள் அணிந்து கொள்வது அன்றைய வழக்கமாக இருந்ததால், படத்திலும் அந்த காட்சிகள் இடம்பெறுகிறது. இருவருமே சுமார் 2 கிலோ நகைகளை அணிந்து நடித்துள்ளனர்.

சோழர்கள் கால நகைகள் குறித்து கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களில் ஆய்வு செய்து, கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவானவை இந்த நகைகள்.

தங்கத்தில் ஒரு சில நகைகளும், மற்றவை கவரிங் மற்றும் ஐம்பொன்னில் செய்யப்பட்டுள்ளன.

தற்போது இதே ஸ்டைலில் நகைகளை விற்க நகைக்கடையினர் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி, 'தி சோழாக்' என்ற பெயரில் முன்னணி நகை கடை நிறுவனம் ஒன்று விற்பனையை துவக்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் பயன்படுத்தப்பட்ட நகைகளை ஏலம் விட, படத் தயாரிப்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...