குட்டீஸ்களை அசத்த... மொறு மொறு வெண்டைக்காய் ஃபிரை

அடம் பிடிக்கும் குழந்தைகளை அசத்த, மொறு மொறுப்பான வெண்டைக்காய் ஃபிரை செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.

சூடான கடாயில் 2 டே.ஸ்பூன் நிலக்கடலையை வறுக்கவும். பாதி வறுபட்டவுடன், சிறிதளவு கடலைப்பருப்பு, தனியா, எள், 2 சிவப்பு மிளகாய், சேர்த்து வறுத்து, மிக்சி ஜாரில் நைஸாக அரைக்கவும்.

ஒரு பவுலில் சிறிதளவு மிளகாய்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, சீரகத்தூள், கடலை மாவு, அரிசி மாவு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கவும்.

இதனுடன் அரைத்த நிலக்கடலை தூள் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். பின், நீளவாக்கில் நான்காக வெட்டிய வெண்டைக்காய்களை சேர்த்து கிளறவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை; வெண்டைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது. ஈரப்பதத்துக்கு சிறிது எண்ணெயை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அடுப்பை மிதமான தணலில் வைத்து, சிறிது சிறிதாக வெண்டைக்காய்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

இப்போது சுவையான, மொறு மொறுப்பான வெண்டைக்காய் ஃபிரை ரெடி. பார்ப்பதற்கு குர்குரே போன்று இருப்பதால், குட்டீஸ்களும் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...