விமான டிக்கெட்டுகளில் சேமிப்பது எப்படி? இதோ சில ஐடியாகள் !

பயணத்தை திட்டமிட்டவுடனேயே ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யும் போது, டிக்கெட் விலை குறைவாக இருக்கக்கூடும்.

பயணத்தேதியில் சமாளிக்கலாம்... ஒரு நாள் முன்கூட்டியோ அல்லது கழித்தோ செல்லும் போது டிக்கெட் விலையில் ஏற்றதாழ்வு இருக்கும் என்பதால் அதற்கேற்ப பயணத்தேதியை திட்டமிடலாம்.

பாரம்பரிய விமான நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பட்ஜெட் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் சேவையை அவ்வப்போது வழங்குகின்றன.

ஒருசில விமான நிறுவனங்களும், முன்பதிவு தளங்களும் நீங்கள் அடிக்கடி ஆன்லைனில் தேடுவதைக் அறிந்தால் விலையை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒரே ஐடியில் தேடுவதை தவிர்க்கவும்.

நேரடி விமானங்கள் வசதியாக இருந்தாலும், டிக்கெட் விலை அதிகம். அதேவேளையில், இணைப்பு விமானங்கள் சில நேரங்களில் மலிவானதாக இருக்கக்கூடும்.

நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால், விமான நிறுவனங்கள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் லாயல்டி திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பயணத்தை தவிர்க்கும் போது குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைக்கக்கூடும்.

அதிகாலை அல்லது இரவு போன்ற ஃப்ரீ நேரங்களிலும் விமான டிக்கெட் விலை மலிவாக இருக்கக்கூடும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...