சோம்பலைக் கடக்க ஜப்பானியர்களின் சில டிரிக்ஸ்...!

கைசன் (Kaizen)... இதன்படி அனைத்தையும் ஒரேயடியாக செய்வதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதை நோக்கமாக வைத்தால், நாளடைவில் சாதனைகளுக்கு வழிவகுக்கும்.

பொமோடோரோ (Pomodoro)... இந்த டிரிக்கின் படி, முதல் 25 நிமிடங்களுக்கு முழு கவனத்துடன் வேலை; பின் 5 நிமிட இடைவெளி என தொடர்ச்சியாக செய்யும் போது அதிக கவனம் செலுத்தலாம்.

இகிகாய் (Ikigai)... வாழ்க்கையில் உங்கள் நோக்கத்தை கண்டுபிடித்து, அதற்கேற்ப செயல்படும்போது, இலக்கை எளிதாக எட்டி வாழ்க்கை அழகாக மாறும்.

காமன் (Gaman)... பொறுமையுடனும், கண்ணியத்துடனும் இருப்பதை இது குறிக்கிறது. கடினமான நேரங்களை இது சமாளிக்க உதவுகிறது.

ஹரா ஹச்சி பு (Hara Hachi Bu): 80 சதவீதம் மட்டுமே சாப்பிடவும். அதாவது அதிகப்படியான உணவைத் தவிர்ப்பதன் மூலம், மதிய உணவிற்குப் பின்னர் மந்தநிலையைத் தவிர்க்கலாம்.

ஷோஷின் (Shoshin)... வேலை முதல் உறவுகள் வரை எந்த பணியையும் முதல்முறையாக செய்யும்போது உள்ள அதே ஆர்வத்துடன் அணுக வேண்டும்.

வாபி-சபி (Wabi-sabi)... உங்களின் வேலை அல்லது திட்டத்தின் தனித்துவமான, முக்கியமான பகுதியில் முழு கவனத்தை செலுத்தலாம்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...