ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய சிம்ரன்!

தமிழ் சினிமாவில் ஒன்ஸ்மோரில் துவங்கி, அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ரமணா உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் சிம்ரன்.

மும்பை நடிகையான இவர் தென்னிந்திய சினிமாவில் 2003 வரை கொடிகட்டி பறந்தார்.

சிம்ரன் தனது பால்ய நண்பரான தீபக்கை திருமணம் செய்து கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த போது மும்பையில் குடியேறினார் .

குழந்தைகள் வளர்ந்த பிறகு, பேட்ட, ராக்கெட்ரி நம்பி விளைவு, துருவ நட்சத்திரம், அந்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் ‛குட்கா பை சிம்ரன்' என்ற பெயரில் ஒரு ஸ்டார் ஹோட்டலும் நடத்தி வருகிறார் சிம்ரன்.

அனைத்து வகையான சைவ உணவுகளும் ஒரு பிளேட் ரூ.1,000, அசைவ உணவு ஒரு பிளேட் ரூ.1,500 என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டு ஹோட்டல் பிஸ்னஸில் சிம்ரன் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...