இண்டோர் செடிகள் பராமரிப்பு அவ்வளவு கஷ்டமில்லைங்க…

உயிர் ஓட்டமுள்ள இண்டோர் செடிகள், கைக்கு அடக்கமான சிறு சிறு செடிகள் முதல் பெரிய செடிகள் வரை பல ரகங்களில், வண்ணங்களில் கிடைக்கும்.

இண்டோர் செடிகளை கவனிக்காமல் விட்டால் சீக்கிரமே அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. கொஞ்சம் மெனகெட்டால் போதும் நன்கு பாதுக்காக்கலாம்.

பராமரிக்க எளிதான செடிகளை தேர்வு செய்யுங்கள். அப்போதுதான் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்கும்.

வழக்கமாக மற்ற செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப்போல இண்டோர் செடிகளுக்கு தண்ணீர் விடக்கூடாது.

ஒரு சில செடிகளுக்கு எப்போதாவது தண்ணீர் விட வேண்டும். எந்தெந்த செடிக்கு எப்படி தண்ணீர் விடவேண்டும் என்று அறிந்திருக்க வேண்டும்.

தொட்டியின் அடிப்புறத்தில், அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதற்கான துளைகள் உள்ளதா என்று கவனித்து வாங்க வேண்டும்.

வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை அடிக்கடி நகர்த்தி வைக்க வேண்டாம்.

இதற்கு நேரடியான சூரிய வெளிச்சம் தேவையில்லை என்றாலும், மறைமுகமாக சூரிய ஒளி கிடைக்கும்படி வைப்பது நல்லது.

செடிகளின் பிரச்னைகளுக்கு ஏற்ப மற்றும் அதன் வளர்ச்சிக்கு ஏற்றவாரோ இயற்கை உரங்களை இட வேண்டும்.

செடிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல், குறிப்பிட்ட இடைவெளியில் வெட்டிவிடுவது அதன் அழகை மேம்படுத்தும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...