தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் தண்ணீர்... பல பிரச்னைகளுக்கு ஒரு தீர்வு!

நெல்லிக்காயில் வைட்டமின் சி உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சட்னி, ஜூஸ், ஊறுகாய் என பலவிதமாக எடுத்துக்கொள்ளோம்.

நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கி வெயிலில் காய வைத்து, நன்கு காய்ந்ததும் மிக்ஸியில் நஸ்ஸாக அரைத்து டப்பாவில் போட்டு வைக்கவும்.

நெல்லிக்காய் தண்ணீரை காலையில் குடித்து வந்தால் செரிமான பிரச்னைகள் சரியாகும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுகளை நீக்குகிறது.

தினமும் நெல்லிக்காயை தண்ணீர் குடித்து வந்தால், அது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்த உதவுகிறது. இது உடல் எடையை குறைக்க உதவும்.

பருக்கள், திட்டுக்கள், சுருக்கங்கள், தெளிவற்ற முகம் போன்ற சருமப்பிரச்னைகளையும் நெல்லிக்காய் தண்ணீர் போக்க உதவும்.

நெல்லிக்காயில் க்ரோமியம் என்னும் பண்பு உள்ளது. இது இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

சளி, இருமலை சரி செய்ய நெல்லிக்காய் பொடி தண்ணீருடன் இஞ்சி, தேன் கலந்து குடிக்கலாம். இது சுவாசப்பாதை சீராக்கும்.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...