லவ்வர், லால் சலாம் பட கதாநாயகிகள்… நியூ கிரஷ்ஸ் ஆவார்களா?

2023ல் தெலுங்கில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற படம் 'மேட்'. இப்படத்தில் ஸ்ரீ கவுரிப்ரியா, அனந்திகா சனில்குமார் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.

இவர்கள் தற்போது வெளியான 'லவ்வர், லால் சலாம்' தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க காத்துள்ளார்கள்.

ஸ்ரீ கவுரிப்ரியா 'மேட்' படம் தவிர கடந்த வருடம் வெளியான ஓடிடி வெப் சீரிஸ் ஆன 'மாடர்ன் லவ் சென்னை'யில் நடித்துள்ளார்.

'லவ்வர்' படத்தில் கிடைத்துள்ள வரவேற்பால் தனக்கு தமிழ் சினிமாவிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்.

அனந்திகா சனில் குமார் கடந்த வருடம் வெளியான 'ரெய்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

அதன்பின் 'மேட்' படத்திலும் நடித்தார். இப்போது 'லால் சலாம்' படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக நடித்துள்ளார்.

கவுரிப்ரியா, அனந்திகா தமிழக ரசிகர்களின் நியூ கிரஷ்ஸ் ஆவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Web Stories

மேலும் தினமலர் ஸ்டோரீஸ் படிக்க...