Load Image
dinamalar telegram
Advertisement

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்

தயாரிப்பு - டி பிக்சர்ஸ்
இயக்கம் - தயாள் பத்மநாபன்
இசை - மணிகாந்த் கத்ரி
நடிப்பு - வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப்
வெளியான தேதி - 19 மே 2023 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம்
ரேட்டிங் - 2.25/5

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கொன்றால் பாவம்' படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் இயக்கத்தில் இன்று(மே 19) ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள படம். வரலட்சுமி சரத்குமார், ஆரவ், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர், அமித் பார்கவ் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

ஓடிடியில் வெளியாகும் படம் என்றால் அதற்கென ஒரு தனி இலக்கணத்தை சிலர் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். அதாவது பெரும்பாலும் த்ரில்லர் கதையாக இருக்க வேண்டும், திரைக்கதை மிக மெதுவாக நகர வேண்டும் என்பதுதான் அது. அதே வழியில் இப்படமும் பயணிக்கிறது. இயக்குனர் தயாள் பத்மநாபன் சிம்பிளான ஒரு கதையை எடுத்துக் கொண்டு ஆங்காங்கே சில சஸ்பென்ஸுகளுடன் மட்டும் கொஞ்சமாக ரசிக்க வைத்திருக்கிறார். அதிலேயே பல கேள்விகளும் எழுகிறது.

வரலட்சுமி, மகத், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர்கள். வரலட்சுமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர். மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மகத் திடீரென காணாமல் போகிறார். அவரைப் பற்றியத் தகவல் இல்லை. மேலும், உண்மைகளை அறிய அந்த ஸ்டேஷனுக்கு மாற்றல் கேட்டு வருகிறார் வரலட்சுமி. ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அமித் பார்கவ், தாதா சுப்பிரமணிய சிவா ஆகியோர் மகத்தைக் கொலை செய்ததைக் கண்டுபிடிக்கிறார். அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் போடுகிறார். வரலட்சுமியும் அவரது நண்பர்களும் அதைச் செய்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே முக்கால்வாசிப் படமும் நகர்கிறது. காவல் துறைக்கும், ரவுடிகளுக்கும் இடையிலான தொடர்பு, அதில் சிக்கும் ஒரு அப்பாவியின் சோகக் கதை என சென்டிமென்ட் ஸ்டேட்மென்ட்டும் படத்தில் உண்டு.

வரலட்சுமி சரத்குமார் தனது காதலன் மகத்தின் அநியாயக் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறார். ஏன் இவ்வளவு இளைத்துவிட்டார் எனத் தெரியவில்லை. அதனால், கம்பீரமாகத் தெரிய வேண்டிய காட்சிகளில் கூட சோர்வாக, சோகமாகத் தெரிகிறார். படத்தின் இடைவேளையின் போதுதான் உதவி கமிஷனராக ஆரவ் என்ட்ரி கொடுக்கிறார். வரலட்சுமியையும், அவரது நண்பர்களையும் அவர் கண்டுபிடித்து விடுவாரோ என ஒரு பதைபதைப்பை ஏற்படுத்துகிறார். அவருக்கும் ஒரு பிளாஷ்பேக் வைத்திருப்பது எதிர்பாராத திருப்பம்.

வரலட்சுமியின் நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் கொடுத்த கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். மகத் சிறிது நேரமே வந்தாலும் சோக கீதம் பாடிவிட்டுச் செல்கிறார். அமித் பார்கவ் இன்ஸ்பெக்டராக தோற்றத்தில் கம்பீரம் காட்டினாலும் நடிப்பில் அது வரவில்லை. சுப்பிரமணிய சிவா அதிரடியான பெரிய தாதா என்கிறார்கள். ஆனால், சாதாரணமாகப் பேசி விட்டு கடந்து போகிறார்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தனித் தனியே குறிப்பிடும் அளவிற்கு டெக்னிக்கலான படமல்ல. ஒரு டிராமா போலத்தான் படம் முழுவதும் நகர்கிறது. உதவி கமிஷனர் ஆரவ் தன்னைப் பார்க்கும் பார்வையிலேயே சப் இன்ஸ்பெக்டர் வரலட்சுமிக்கு ஒரு சந்தேகம் வராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

இதைவிட டுவிஸ்ட் ஆன வேற்று மொழித் திரைப்படங்கள், வெப் தொடர்கள் என பார்க்க ஆரம்பித்துவிட்ட ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் உள்ள டுவிஸ்ட் எல்லாம் சாதாரணம்தான்.

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் - ஓல்டு ஸ்டேஷன்வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement