Load Image
dinamalar telegram
Advertisement

ராக்கெட்ரி - நம்பி விளைவு

தயாரிப்பு - டிரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - மாதவன்
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - மாதவன், சிம்ரன்
வெளியான தேதி - 1 ஜுலை 2022
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 4/5

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இன்று விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்த சாதனைகளுக்கு விண்வெளி விஞ்ஞானியான நம்பி நாராயணன் உழைப்பும் ஒரு காரணம்.

விண்வெளித் துறையின் எதிர்காலம் திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தை நோக்கித்தான் போகும் என்பதை 1970களில் உணர்ந்து அதற்கான முயற்சியில் இறங்கி திரவ எரிபொருள் விண்வெளி எஞ்சினைக் கண்டுபிடித்தவர் நம்பி நாராயணன். இன்றைய ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதிகமாகப் பயன்படும் கிரையோஜெனிக் இஞ்சின் துறையின் பொறுப்பாளராகவும் இருந்தவர்.

1994ம் ஆண்டு அண்டை நாட்டுக்கு நமது ராக்கெட் ரகசியங்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கேரள காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 50 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் நான்கு வருட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 1998ம் ஆண்டுதான் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இப்படி பல சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தான் இந்த 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'.

நடிகர் மாதவன் முதல் முறையாக இயக்குனராகப் பொறுப்பேற்று ஒரு சிறந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். முதல் படத்திலேயே ஒரு சவாலான கதையை எடுத்துக் கொண்டு படமாக்குவது சாதாரண விஷயமல்ல. இந்தியாவில் ஆரம்பமாகும் கதை பின்னர் அமெரிக்கா பயணித்து, மீண்டும் இந்தியா திரும்பி, பின்னர் ரஷியா சென்று, திரும்பவும் இந்தியா திரும்புகிறது. 1970கள், 1990கள் என அந்தக் காலத்து வெளிநாடுகளையும் திரையில் கொண்டு வந்து காட்டி கடுமையாக உழைத்திருக்கிறார் இயக்குனர் மாதவன். தமிழ் வசனங்களையும் அவரே எழுதியுள்ளார். பல வசனங்கள் தியேட்டர்களில் கைத்தட்டல் பெறும் அளவிற்கு உள்ளன. நடிகராக பலரின் மனம் கவர்ந்த மாதவன், இயக்குனராகவும் மனம் கவர்ந்துவிட்டார்.

இயக்கத்தில் உள்ள பொறுப்புடன் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தையும் ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார் மாதவன். அதிலும் வயதான தோற்றத்தில் பார்க்கும் போது இருவருக்கும் வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அப்படியே மாறியிருக்கிறார் மாதவன். தேசத்திற்காக ஈடுபாட்டுடன் உழைக்கும் ஒரு விஞ்ஞானி. அமெரிக்காவின் நாசா விண்வெளித் துறை அவரது திறமையைப் பார்த்து வேலைக்கு அமைத்தும், அதை உதறிவிட்டு நாட்டுக்காக உழைக்க வேண்டும் என இந்தியாவுக்குத் திரும்பியவர். திரவ எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து எஞ்சின் உருவாக்கியவர். இப்படி பல புதிய சாதனைகளைப் படைத்தவரை திடீரென கேரள காவல் துறை நாட்டுக்கு துரோகம் செய்ததாகக் கூறி கைது செய்கிறது. அதன்பின் அவரும், அவரது குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரங்களும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இந்த ஆண்டின் தேசிய விருதுகளில் பல விருதுகளை இந்தப் படம் அள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாதவனின் மனைவியாக சில காட்சிகளில் சிம்ரன். இவர்கள் இருவர் மட்டுமே நமக்கு அதிகம் தெரிந்த முகங்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களில் ராகவேந்தர், ஜெகன், மிஷா மட்டுமே நமக்குத் தெரிந்தவர். மற்றவர்கள் புதுமுகங்களாக இருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தை பேட்டி எடுப்பவராக சூர்யா நடிகராகவே நடித்திருக்கிறார். அந்தப் பேட்டியிலிருந்துதான் காட்சிகள் பிளாஷ்பேக்காக நகர்கின்றன.

சாம் சிஎஸ் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. உணர்வு பூர்வமான பல காட்சிகளுக்கு உயிரோட்டமான இசையைத் தந்திருக்கிறார். சிரிஷா ராய் ஒளிப்பதிவு அந்தக் காலகட்டங்களை இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது.

ராக்கெட் தொழில் நுட்பம் சார்ந்த பல டெக்னிக்கல் விஷயங்ள் படத்தில் இடம் பெற்றுள்ளது. அவை பலருக்கும் புரியாத ஒன்று. படம் முழுவதும் மாதவனைச் சுற்றி மட்டுமே நகர்கிறது. படத்தில் நம்பி நாராயணன் கதாபாத்திரம் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒரு அமெரிக்கர் பின் தொடர்கிறார். அவர்தான் ஏதோ செய்து நம்பியை கைது செய்யவும் காரணமாக இருப்பாரோ என நம்மை யூகிக்க வைக்கிறார்கள்.

நம்பி நாராயணன் எதற்காக, யாரால், எந்தப் பின்னணியில் கைது செய்யப்பட்டார் என்பதை படத்தில் சொல்லவில்லை. அதை படத்தின் இரண்டாம் பாகமாக ஒரு முழுநீள கமர்ஷியல் படமாகவும் எடுக்கலாம்.

இந்திய விண்வெளித் துறை விஞ்ஞானிகள் தங்களது ஆரம்ப காலப் போராட்டங்களை எப்படி சாதனைகளாக மாற்றினார்கள் என்பதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும்.

ராக்கெட்ரி, நம்பி விளைவு - உச்சம்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து (21)

 • பிறைசூடன் - Chennai,இந்தியா

  நேற்று இந்தப் படத்தின் தமிழ் தயாரிப்பைப் பார்த்தேன். மிக அற்புதம். குறை கூற விரும்பிய ஒரேயொரு விஷயம் என்னவென்றால், படத்தின் இறுதிக் கட்டத்தில் பேட்டி முடியும் பொழுது திரு நம்பி நாராயணன் அவர்கள் "ஜெய் ஹிந்த்" என்று கூறுவார். ஆனால் பேட்டி எடுப்பவர்(ன்) (நடிகர் சூர்யா) ஜெய் ஹிந்த்" என்று சொல்லமாட்டார்(ன்). மாதவன் செய்த மிகப்பெரிய தவறு நடிகர் சூர்யாவை தேசபக்தி, தேசத்தின் விஞ்ஞான வளர்ச்சி சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க வைத்தது. இதற்கு நடிகர் அர்ஜுன் அல்லது பிரசன்னாவை பேட்டி எடுப்பவராக செய்திருக்கலாம்.

  • Manian - Chennai,ஈரான்

   சூரியா சொல்லாததாலே இந்தியா குறைந்துவிடுமா. இங்கே மாதவனாக நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானி பளிச்சிடுகிறார் என்பதே முக்கியம். நல்லவேளை இதில் சூரியா நம்பி நாரயணாக நடிக்கவில்லை என்பதே மேல்.

 • ashwin - Seattle,யூ.எஸ்.ஏ

  Movie Super Flop. Not worth watching and waste of money :(

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

   போடா... பாடு.. நல்லா பாடு

  • Manian - Chennai,ஈரான்

   யு எஸ் இல் இருந்து கொண்டு, ஜேம்ஸ் பாண்ட் சினிமா எதிர்பார்க்கும் உன் புத்தியில் நல்லதே தெரியாதா? அங்கே போன பின்பும் உன் பின் புத்தி மாறவில்லை என்பது வருத்தமே.

  • Aarkay - Pondy,இந்தியா

   சுறா, அஞ்ஞான், வெடி பட ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காததில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

  • S.Ganesan - Hosur,இந்தியா

   சுள்ளானையும் சேர்த்து கொள்ளுங்கள்

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

   அஸ்வின் பெண் சிங்கம் பாருங்க கலைங்க கய் வண்ணத்தில் ம்ம்ம் சூவ்பேர் படம்

 • Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மிக நுணுக்கமாக புனயப் பட்ட வழக்கு ,அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அந்த சமயத்தில் சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் அந்த பொய்யை நிஜமாக்கியிருப்பார்கள் , தாமதமாக நீதி கிடைத்தாலும் அவர் வென்றது பெரிய சந்தோஷம் , அறிவற்ற அதிகாரம் படைத்தவர்கள் ஒரு அறிவு ஜீவியை எப்படி சிதைத்தார்கள் என்பது புரியும்

  • Aarkay - Pondy,இந்தியா

   ஒரு சமூகத்தை அதிகார வர்க்கம் எப்போதுமே எதிர்க்கும் போக்கு....

 • ashwin - Seattle,யூ.எஸ்.ஏ

  Big Flop. Not worth watching.

  • Aarkay - Pondy,இந்தியா

   கூட்டத்துக்கு வரலியா? பிரியாணியும், குவாட்டரும் தர்றாங்களாம்.

  • Shankar G - kuwait,குவைத்

   mr.Ashwin, persons like you do not know what patriotism is......u people are selfish, self centred and bent on satisfying only yourself.....dont know what living for a higher calling is all about......such morons can only be whereeever you are.....you can neither be of any use to yourself, to this society or to the country whereever you are living in.....this is a real life story of a Scientist who has sacrificied everything at the altar of this nation.....you have no right to comment on something on which you have no knowledge about.....so better be quiet.

  • Manian - Chennai,ஈரான்

   அவன் தன்னுடைய தாழ்வு மனப்பான்மை - தான் இதுபோல செய்ய முடியவில்லையே என்ற பொறாமை- போன்ற குணங்களை வெளி இடுகிறான். விஞ்சானி ஆவது கடினம், இவன் அஞ்ஞணி, இவன் உண்மையில் அமெரிக்காவில் இருபபவனாக இருந்தால் தன முட்டாள்தனை இப்படி வெளி இடமாட்டான். இவனை போன்றவர்கள் கோடிகள இந்தியாவில். நம்பி நாரயணன் மாம்பழம், இவன் அதில் உள்ளே புகுந்த வண்டே கணித மேதை ராமானுஜமும் . நம்பி போல் ஒரு அறிஞ்கனே.

  • Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ

   அஸ்வின்.. ஒரு தடவை உங்க கருத்தை சொல்லலாம். இரண்டு தடவை சொன்னால் உண்மை ஆகியிருமா?.. ஒருவருடைய வாழ்க்கை போராட்டத்தை கதையாக்கி அதில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது கதை. கும்மாங்குத்து டான்சம் வேறு இத்யாதிகளும் படத்தில் பார்க்க வேணும் என்றால் உங்கள் தலைவர் படம் தான் பார்க்கணும்.

  • Manian - Chennai,ஈரான்

   இப்படியும் பாரக்கலாமே இது அறிவு உள்ளவங்க, அறிவாளிங்க பார்க்க வேண்டிய படம், டப்பாஙகு பபடம் இல்லை என்ற வஞ்சகப் புகழ்ச்சியாகவும் இருக்கலாமே மழையில்் நனைந்து கொண்டு பின்னால் ஆர்கெஸ்டிரவுடன் " நிலவே வந்தேன் என் ராக்கிட் ஏறி, நில்லாதே கணா ஓடிவா..." என்று நம்பி பாடியிருந்தால் அது தீவாளி ராக்கெட் வெடி வுடறவன் பாடலாகத்தானே இருக்கும்"இது அறிவாளி படும்பாடைக் காட்டுகிறது.

 • Manian - Chennai,ஈரான்

  130 கோடி இந்தியர்களில் ஒரு 5 லட்சம் உயர் தர விஞ்ஞானிகள் கண்டிப்பாக இருக்க முடியும். தகுதி இல்லாதவர்களே இந்த அறிவு ஜீவி விதைகளை, பொறாமை, ஜாதி, மத, பால் வழி, போலி இட ஒதுக்கீடு, மொழி, மாநிலம் என்ற போர்வையில் வெளிநாடுகளுக்கு விரட்டி விடுகிறார்கள். ஒவ்வொரு புதிய கண்டு பிடிப்புக்களும் புதிய தொழில் நுட்பங்களுடன் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை தந்து நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பை பலப் படுத்துகிறது. காப்புரிமை பெருவது, ஏட்டுக் கல்வியால்- சித்தாந்தம் சொல்லி நீரூபணம் காட்டும் (algorithmic, deductive logical teaching ) முறையால் , மனப்பாட கல்வியால் வருவதில்லை. அது, நடைமுறை வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நிகழ்வால், துளிர்விடும் அறிவு தாக்கம் உள்ள குழந்தை மனதில்,"ஏன்" என்ற கேள்வியால் பின்னால் கண்டுபிடிப்பாக மாறும் "நிழ்வு கண்டு சித்தாந்தம் படைத்தல்(from observation reaching for a theory- inductive reasoning) என்பதாக மாறி, அதுவே சித்தாந்தம் சேர்ந்த கல்வியாக (Algorithmic text book based education ) பல்கலை கழகங்கள் மூலம் கற்பிக்கப்படும். நம்பி நாராயணண், சிவி ராமன், போஸ், அமார்த்யாய சென்,... போன்றவர்கள் 'அறிவு ஆலமரங்கள் - “'தெள்ளிய ஆலின் சிறு பழந்து ஒரு விதை தெண்ணீர் கயற்று சிறுமீன் சினையினும் நுண்ணியதே ஆயினும், அண்ணல், தேர் ஆட்பெரும் படையொடு மன்னர்க்கு இருக்க நிழலாகுமே”- அறிவு ஜீவிகள் ஆலமரம், அவர்கள் நிழல் பரந்து விரிந்தது. மாதவன், நம்பிநாரணன் மூலம் "அறிவு ஜீவிகளின் தேசீய அர்பணிப்பை" அருமையாக படைத்து நமது அகக் கண்ணை திறந்திருக்கிறார். தூங்குவதாக பாசாங்கு செய்யும் போலி பட்டதாரிகள், " நான் படிச்ச படிப்பு க்கு தகுந்த படி வேலை கிடைக்கவில்லை என்னும், நாஸ்காமால் ஆளுமைத் திறன் இல்லாத 94.5% , புத்தக புழுக்களுக்கு புரியாது. "எது, என்ன WHAT AND HOW" என்ற சித்தாந்தம் வழியிலே கற்ற ,பட்டாக் கத்தி "ஏன் WHY - "என்ற சுயசிந்தனை இல்லாதவர்களுக்கு டாஸ்மார்க், ஓசி பிரியாணியே ஒரே வழி.

 • Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா

  நான் 1984 லிருந்து தினமலர் வாசகன். 1994 ல் நான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த பொழுது திரு. நம்பி நாராயணன் பற்றி நாளிதழ்கள் வாயிலாக அறிய நேர்ந்தது. அந்த சமயத்தில் வெறும் செவிவழிச் செய்தியையே நாளிதழ்களும் வெளியிட்டு அவரை ஒரு தேசத்துரோகியாகவும், பெண் பித்தராகவுமே சித்தரித்தன.பின்னர் உண்மையை அறிந்த போது மனது வலித்தது. அந்த மனிதரை எப்படியெல்லாமோ கரித்துக் கொட்டியிருக்கிறேன். இது என்றென்றும் என் மனதை அரிக்கும் விஷயங்களில் ஒன்று. என்னை நானே மன்னிக்க முடியவில்லை. ஒரு நாட்டின் மக்களை விடவும் செய்தி ஊடகங்களுக்கு சமூக பொறுப்புணர்வு இன்னும் முக்கியம் என்று உணர வைத்த சம்பவம். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரி சமீபத்தில் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது "தெய்வம் நின்று கொல்லும்" என்னும் நம்பிக்கையைத் தருகிறது.

  • Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

   மிக நுணுக்கமாக புனயப் பட்ட வழக்கு ,அவரின் வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அந்த சமயத்தில் சமூக ஊடகங்கள் இருந்திருந்தால் அந்த பொய்யை நிஜமாக்கியிருப்பார்கள் , தாமதமாக நீதி கிடைத்தாலும் அவர் வென்றது பெரிய சந்தோஷம் , அறிவற்ற அதிகாரம் படைத்ததவர்கள் ஒரு அறிவு ஜீவியை எப்படி சிதைத்தார்கள் என்பது புரியும்.

  • Manian - Chennai,ஈரான்

   "சித்தாந்தம் சொல்லி நீரூபணம் காட்டும் (algorithmic, deductive logical teaching ) முறையால் காலேஜில் கல்வி, மின் மண்டை( frontal cortex) முழுவதும் வளராத வயதில் (27-28 வயதில்) இதுபோல் தவறாகச் சிந்திப்பது பொதுவாக அதிகம். தற்போது அதை உணர்ந்தள்ளீர்கள். ராமன் ,கிருஷ்ணண் போன்ற தெய்வங்கள் பிராமணர்கள் இல்லை இங்கே பிராமண அரசர்களும் இல்லை. இருந்தாலும் அவர்கள் தற்போதும் இங்கே அரசர்களாக இருப்பதாக மனமுதிர்ச்சி இல்லாமல் பிதற்றுவதில்லையா? ஏன் மனுவும் ஒரு ஷத்திரியன்தானே இன்று பெரும்பாலன ஏழைகள் ஓட்டை விற்பதால்சு தந்திரம் பெற்றது தவறு எண்ணுவதும் அவ்வாறே இன்றய பட்டாக் கத்தி மாணவர்களும் 27-28 வயதில் தங்கள் தவறை கண்டிப்பாக உணர்வார்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement